உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / களமிறங்குகிறார் நீரஜ் சோப்ரா * தோகா டைமண்ட் லீக்கில்...

களமிறங்குகிறார் நீரஜ் சோப்ரா * தோகா டைமண்ட் லீக்கில்...

புதுடில்லி: தோகா டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கிறார் நீரஜ் சோப்ரா.ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டிகளுக்காக 'டைமண்ட் லீக்' தொடர் நடத்தப்படுகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டிக்கான 'டைமண்ட் லீக்' 2024ம் சீசன் மே 10ல் துவங்குகிறது. கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கவுள்ள இப்போட்டியில் பங்கேற்கும் கடினமான 10 வீரர்கள் குறித்த விபரம் வெளியானது. இந்தியாவுக்காக ஒலிம்பிக் (டோக்கியோ, 2021) தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) இதில் பங்கேற்க உள்ளார். கடந்த ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் மற்றொரு வீரர் கிஷோர் ஜெனாவும் பங்கேற்கிறார். தோகா தொடரின் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, புதிய சீசனை வெற்றிகரமாக துவக்க காத்திருக்கிறார். இவருடன் ஜெனா, 'டாப்-3' இடம் பிடிக்க முயற்சிக்கலாம். ஒலிம்பிக் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜாகுப் வால்டெச், இந்திய வீரர்களுக்கு சவால் கொடுக்க உள்ளார். சமீபத்திய தென் ஆப்ரிக்க கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இவர் 87.00 மீ., துாரம் ஈட்டி எறிந்துள்ளார்.கடந்த ஆண்டு முழுவதும் தடுமாறிய கனாடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜப்பானின் ஜென்கி, அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை