உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உயரிய கொள்கை: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

உயரிய கொள்கை: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

நான்காவது ஒலிம்பிக்கை (1908) நடத்த ரோம், பெர்லின் இடையே கடும் போட்டி காணப்பட்டது. கடைசியில் லண்டன் நகரம் வாய்ப்பை தட்டிச் சென்றது. வீரர்கள் கொடி அணிவகுப்பு முறை அறிமுகமானது. 22 நாடுகளை சேர்ந்த 2008 பேர் (1971 வீரர்கள், 37 வீராங்கனைகள்) பங்கேற்றனர். தடகளம், குத்துச்சண்டை, கால்பந்து உள்ளிட்ட 22 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட்டன.துப்பாக்கி சுடுதலில் சுவீடனின் ஆஸ்கார் ஸ்வான், மான் வடிவ இலக்கை நோக்கி குறி தவறாமல் சுட்டு 2 தங்கம் வென்றார். 1912ல் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றார். 1920ல் வெள்ளி வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மிகவும் வயதான (72 வயது, 279 நாட்கள்) வீரரானார். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை கைப்பற்றினார்.நவீன ஒலிம்பிக்கின் தந்தை என போற்றப்பட்ட பியரி கூபர்ட்டின்,'ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியை காட்டிலும் பங்கேற்பதே முக்கியம். வீழ்ந்தாலும், கடினமாக போராட வேண்டும்,' என்ற கொள்கையை 1908ல் பிரகடனப்படுத்தினார்.

எக்ஸ்டிராஸ்

146 பதக்கம்லண்டன் ஒலிம்பிக்கில் 56 தங்கம், 51 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 146 பதக்கங்கள் வென்ற இங்கிலாந்து முதலிடம் பிடித்தது. அடுத்த இரு இடங்களை அமெரிக்கா (23 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம்), சுவீடன் (8 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம்) பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி