உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தங்கம் வென்றார் ஜோதி: ஆசிய உள்ளரங்கு தடகளத்தில்

தங்கம் வென்றார் ஜோதி: ஆசிய உள்ளரங்கு தடகளத்தில்

டெஹ்ரான்: ஆசிய உள்ளரங்கு தடகளத்தில் இந்தியாவின் ஜோதி (60 மீ., தடை தாண்டும் ஓட்டம்), ஹர்மிலன் பைன்ஸ் (1500 மீ., ஓட்டம்) தங்கம் வென்றனர்.ஈரானில் ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் 10வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பந்தய துாரத்தை 8.12 வினாடியில் கடந்த இந்தியாவின் ஜோதி, தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, ஆசிய உள்ளரங்கு தடகளத்தில் ஜோதி கைப்பற்றிய 2வது பதக்கம். கடந்த ஆண்டு கஜகஸ்தானில் நடந்த இத்தொடரின் 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளி வென்றிருந்தார். இதில் இலக்கை 8.13 வினாடியில் கடந்த இவர், தேசிய சாதனை படைத்திருந்தார். தவிர இவர், 6வது முறையாக தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இலக்கை 4 நிமிடம், 29.55 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் ஹர்மிலன் பைன்ஸ் தங்கம் வென்றார். இவர், ஆசிய விளையாட்டு (2022) 1500 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றிருந்தார்.பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஷைலி சிங் (6.27 மீ.,), நயனா ஜேம்ஸ் (6.23 மீ.,) முறையே 5, 6வது இடம் பிடித்தனர்.ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியா சார்பில் தஜிந்தர்பால் சிங் டூர் பங்கேற்றார். ஆசிய விளையாட்டில் இரண்டு முறை தங்கம் வென்ற இவர், அதிகபட்சமாக 19.72 மீ., எறிந்து புதிய தேசிய உள்ளரங்கு சாதனையுடன் தங்கம் வென்றார்.இத்தொடரில் 3 தங்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை