உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவிடம் வீழ்ந்தது மலேசியா: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில்

இந்தியாவிடம் வீழ்ந்தது மலேசியா: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில்

இபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4-3 என மலேசியாவை வீழ்த்தியது.மலேசியாவின் இபோ நகரில், சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் நடக்கிறது. இந்தியா, தென் கொரியா, பெல்ஜியம் உட்பட மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.முதல் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்திய இந்திய அணி, 2வது போட்டியில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி, மலேசியாவை சந்தித்தது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் தமிழக வீரர் செல்வம் கார்த்தி, ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு, 13வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் மலேசியாவின் பைசல் சாரி ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின், 21வது நிமிடத்தில் இந்தியாவின் சுக்ஜீத் சிங் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் மலேசியாவின் பித்ரி சாரி (36வது நிமிடம்), மர்ஹான் ஜலில் (45வது) தலா ஒரு கோல் அடித்தனர். இதற்கு, இந்தியாவின் அமித் ரோஹிதாஸ் (39வது), சஞ்சய் (53வது) தலா ஒரு கோல் அடித்து பதிலடி தந்தனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.மற்ற போட்டிகளில் நியூசிலாந்து அணி 4-2 என கனடாவை வீழ்த்தியது. பெல்ஜியம் அணி 6-2 என தென் கொரியாவை தோற்கடித்தது. மூன்று போட்டிகளின் முடிவில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் பெல்ஜியம் (7 புள்ளி), நியூசிலாந்து (7) அணிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ