மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
ராஞ்சி: பெண்களுக்கான தேசிய ஹாக்கி லீக் போட்டியில் மகாராஷ்டிரா 2-1 என பெங்கால் அணியை வீழ்த்தியது.ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மகாராஷ்டிரா, பெங்கால் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மகாராஷ்டிரா அணி 2-1 என்ற கணக்கில் தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்தது. முதலிரண்டு போட்டியில் மணிப்பூர், மிசோரம் அணிகளை வென்றிருந்தது. மகாராஷ்டிரா அணிக்கு ஐஸ்வர்யா துபே (29வது நிமிடம்), தனுஸ்ரீ (54) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். பெங்கால் சார்பில் ஜமுனா எக்கா (33வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.மற்றொரு லீக் போட்டியில் ஹரியானா, மிசோரம் அணிகள் மோதின. நீலம் (28வது நிமிடம்), பிங்கி (43வது) கைகொடுக்க ஹரியானா அணி 2-1 என தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் ஒடிசா அணியிடம் தோல்வியடைந்த ஹரியானா, 2வது போட்டியில் மணிப்பூரை வீழ்த்தியது.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025