உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பாரிசில் சாதிக்க இந்தியா ரெடி * பதக்க எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

பாரிசில் சாதிக்க இந்தியா ரெடி * பதக்க எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்ல காத்திருக்கிறது.உலக விளையாட்டின் திருவிழா ஒலிம்பிக் போட்டி. 1900 பாரிஸ், 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் இந்தியா தலா 2 பதக்கம் வென்றது. மற்றபடி 13 ஒலிம்பிக்கில் தலா 1 பதக்கம் மட்டும் வென்று திரும்பியது. 6 முறை வெறுங்கையுடன் திரும்பியது.2008ல் முதன் முறையாக இந்தியா 3 பதக்கம் வென்றது. 2012ல் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் பாட்மின்டனில் சிந்து (வெள்ளி), மல்யுத்தத்தில் சாக் ஷி மாலிக் (வெண்கலம்) மட்டும் என 2 பதக்கம் தான் கிடைத்தது. .நீரஜ் அபாரம்கடந்த டோக்கியோ (2021) ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க எண்ணிக்கை முதன் முறையாக 7 ஆனது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் கைப்பற்றினார். வரும் 26ல் துவங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய நட்சத்திரங்கள் சாதிக்க காத்திருக்கின்றனர். இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லலாம்.எதிர்பார்ப்பு எப்படிதடகளம், பாட்மின்டனில் பதக்கம் கிடைக்கலாம். நீரஜ் சோப்ரா, சமீபத்திய போட்டிகளில் தொடர்ச்சியாக 88 மீ., துாரத்துக்கு மேல் ஈட்டி எறிகிறார். பாட்மின்டன் ஒற்றையரில் சிந்து, இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி சாதிக்கலாம்.எத்தனை பதக்கம்துப்பாக்கிசுடுதலில் 2, குத்துச்சண்டையில் நிகாத் ஜரீன், மல்யுத்தத்தில் அன்டிம் பங்கல், வில்வித்தையில் குறைந்தது 6 பதக்கம் கிடைக்கலாம். லவ்லினா கடின பிரிவில் உள்ளதால் பதக்கம் வெல்வது சிரமம்.பளுதுாக்குதல் உட்பட பல போட்டிகளில் சாதித்தால், இந்தியா குறைந்தது 15 பதக்கத்துடன் தாயகம் திரும்பலாம்.மத்திய அரசு உதவிகடந்த மூன்று ஆண்டில் 'மிஷன் ஒலிம்பிக்' திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 72 கோடி செலவிட்டுள்ளது. இது ரியோ ஒலிம்பிக்கை விட 3 மடங்கு அதிகம். வீரர், வீராங்கனைகள் பயிற்சிக்கு மட்டுமன்றி, அவர்களை காயமடையாமல் பாதுகாப்பது, காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வர உதவுவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.முதன் முறையாக பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய அரசு சார்பில் நமது நட்சத்திரங்களுக்காக, 'ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் எக்குயிப்மென்ட்' மையம் அமைக்கப்படுகிறது. இதனால் காயத்தில் இருந்து எளிதாக மீண்டு வரலாம்.எதிர்பார்க்கப்படும் போட்டிபோட்டி பதக்கம்துப்பாக்கிசுடுதல் 1-5மல்யுத்தம் 1-3குத்துச்சண்டை 1-3வில்வித்தை 1-2தடகளம் 1-2பாட்மின்டன் 1-2பளுதுாக்குதல் 0-1ஹாக்கி 0-1கோல்ப் 0-1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ