உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மீராபாய் சானு நான்காவது இடம் * பளுதுாக்குதலில் ஏமாற்றம்

மீராபாய் சானு நான்காவது இடம் * பளுதுாக்குதலில் ஏமாற்றம்

பாரிஸ்: ஒலிம்பிக் பளுதுாக்குதலில் நான்காவது இடம் பிடித்தார் மீராபாய் சானு. பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று பெண்களுக்கான பளுதுாக்குதல் போட்டி நடந்தது. இதன் 49 கிலோ பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 29, களமிறங்கினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி (202 கிலோ) வென்றதால் இம்முறை அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் போட்டி நடந்தது. இதில் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று வாய்ப்பு தரப்பட்டது. அதிகமாக துாக்கிய எடை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 3வது வாய்ப்பில் மீராபாய் சானு 88 கிலோ எடை துாக்கினார். அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' முறையில் போட்டி நடந்தது. இதில் மீராபாய் சானு, அதிகபட்சம் 111 கிலோ துாக்கினார். முடிவில் ஒட்டுமொத்தமாக 199 கிலோ மட்டும் துாக்கிய மீராபாய் சானு, நான்காவது இடம் பிடித்து வெண்கல பதக்க வாய்ப்பை இழந்தார். சீனாவின் ஜிகுய் (206 கிலோ), ருமேனியாவின் மிக்கேலா வாலன்டினா (205 கிலோ), தாய்லாந்தின் சுரோத்சனா (200 கிலோ) முதல் மூன்று இடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை