மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
பாரிஸ்: மல்யுத்த போட்டியில் காயம் காரணமாக கடைசி வினாடியில் தோற்றார் நிஷா.ஒலிம்பிக்கில் நேற்று முதல் மல்யுத்த போட்டி துவங்கின. பெண்களுக்கான பிரீஸ்டைல், 68 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் நிஷா தாஹியா களமிறங்கினார். முதல் போட்டியில் உக்ரைனின் சோவா ரிஸ்கோவை எதிர்கொண்டார். இதில் நிஷா 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இதில் வடகொரியாவின் சோல் கம் பாக்கை சந்தித்தார். நிமிடம் கொண்ட முதல் 'பீரியடில்' நிஷா 4-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது 'பீரியடில்' போட்டி முடிய, 33 வினாடி மட்டும் மீதமிருந்த போது நிஷா 8-1 என முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் நிஷா, வலது முழங்கையில் காயம் ஏற்பட, வலியால் துடித்தார். இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு களமிறங்கினார். இருப்பினும் வலி அதிகரிக்க போட்டியிட முடியாமல் தவித்தார். இதைப் பயன்படுத்திய சோல் கம், அடுத்தடுத்து புள்ளி எடுக்க, நிஷா 8-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். வெற்றி பெற வேண்டிய போட்டியை காயத்தால் நழுவவிட்ட சோகத்தில், கண்ணீர் விட்டு கதறியபடி வெளியேறினார். * முன்னதாக 2016 ரியோ ஒலிம்பிக், மல்யுத்த காலிறுதியில் வினேஷ் போகத், வலது முழங்கால் காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறி இருந்தார்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025