மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தம்அரையிறுதியில்இந்தியாவின் அமன் ஷெராவத் தோல்வியடைந்தார்.பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டிகள் நடக்கின்றன. இதுவரை இந்தியா சார்பில் களமிறங்கிய நிஷா (காலிறுதி), அன்டிம் (முதல் சுற்று) பதக்கம் வெல்லவில்லை. வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறிய போதும், 100 கிராம் கூடுதலாக இருந்தததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.நேற்று ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு 'பிரீஸ்டைல்' போட்டி நடந்தன. இந்தியா சார்பில் அமன் ஷெராவத் 21, களமிறங்கினார். இந்திய அளவில் நடந்த தகுதிச்சுற்றில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவிக்குமாரை வீழ்த்தி, அமன் ஷெராவத், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்தது.முதல் சுற்றில் வடக்கு மாசிடோனியா வீரர் விளாடிமிரை சந்தித்தார். துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து புள்ளி எடுத்த அமன், முதல் 3 நிமிடம் நடந்த 'பீரியடில்' 6-0 என முந்தினார். தொடர்ந்து அடுத்த 'பீரியடில்' 4 புள்ளி எடுக்க, 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.இதில் 2022 உலக சாம்பியன், அல்பேனியாவின் ஜெலிம்கான் அபாகரோவை எதிர்கொண்டார். முதல் 'பீரியடில்' 3-0 என முன்னிலை பெற்றார் அமன். தொடர்ந்து இரண்டாவது 'பீரிடியல்', ஜெலிம்கான் இரு கால்களையும் பிடித்து அடுத்தடுத்து சுற்ற, 9 புள்ளி கிடைத்தது. 2 நிமிடத்தில் போட்டி முடிவுக்கு வர, 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் ஜப்பான் வீரர் ரெய் ஹிகுச்சியிடம் 0-10 என தோல்வியடைந்தார்.வெண்கல வாய்ப்புஇருப்பினும் அமன் இன்று வெண்கலம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. இதற்கான 'ரெப்பிசாஜ்' போட்டியில் வெற்றி பெற்றால், வெண்கலம் தட்டிச் செல்லலாம்.அன்ஷு ஏமாற்றம்பெண்களுக்கான 57 கிலோ 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக், அமெரிக்காவின் ஹெலன் லுாயிசை சந்தித்தார். 2021 உலக சாம்பியன்ஷிப் பைனலில் ஹெலனிடம் தோற்று வெள்ளி வென்றிருந்தார் அன்ஷு. இம்முறை மீண்டு வருவார் என நம்பப்பட்டது. ஆனால், 2-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். ஹெலன் பைனலுக்கு சென்றால், வெண்கல பதக்கத்துக்கான 'ரெப்பிசாஜ்' வாய்ப்பில் அன்ஷு களமிறங்கலாம்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025