மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 'பவர் லிப்டிங்' வீராங்கனை சந்தீப் கவுருக்கு 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்திய 'பவர் லிப்டிங்' வீராங்கனை, சந்தீப் கவுர் 31. கடந்த 2019ல் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கினார். நான்கு ஆண்டு தடைக்குப் பின், 2023, ஆக., மாதம் தேசிய சீனியர் 'பவர் லிப்டிங்' சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று வெண்கலம் வென்றார். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. இரண்டாவது முறையாக தவறு செய்ய சந்தீப் கவுருக்கு, 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தவிர சிறுநீர் மாதிரியில் பல்வேறு ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிந்ததால், 10 ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. 2023, செப்., 6 முதல் தடை துவங்கும்.தவிர, ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய உஷூ வீரர் அவ்னிஷ் கிரி, கேரளா தடகள வீராங்கனை நேஹாவுக்கு தலா நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025