| ADDED : ஜூன் 08, 2024 10:53 PM
லண்டன்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-4 என ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 5வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. லண்டனில் நடந்த போட்டியில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின.போட்டியின் 9வது நிமிட்த்தில் இந்தியாவின் சுனேலிதா, முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 15 வது நிமிடம் தீபிகா ஒரு கோல் அடித்தார். 21 வது நிமிடத்தில் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ஜெர்மனியின் விக்டோரியா கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் 32வது நிமிடம் விக்டோரியா இரண்டாவது கோல் அடித்தார். 51வது நிமிடம் கர்ட்ஸ், 55 வது நிமிடம் ஜூல் என ஜெர்மனி தரப்பில் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.இதுவரை விளையாடிய 15 போட்டியில், 3 வெற்றி, 12 தோல்வியுடன் என 8 புள்ளி எடுத்த இந்தியா 8வது இடத்தில் உள்ளது. இந்திய அணி இன்று, தனது கடைசி போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.