| ADDED : ஜூன் 06, 2024 11:56 PM
முனிக்: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.ஜெர்மனியில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ('ரைபிள்'/'பிஸ்டல்') போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., ஏர்பிஸ்டல் பிரிவு போட்டி நடந்தது. இந்தியா சார்பில் சரப்ஜோத் சிங், அர்ஜுன் சீமா சிங், வருண் தோமர் உட்பட 110 பேர் பங்கேற்றனர். இதன் தகுதிச்சுற்றில் சரப்ஜோத் சிங், 588 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். தலா 582 புள்ளி எடுத்த அர்ஜுன் சிங் 10 வது, வருண் தோமர் 11வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தனர். அடுத்து நடந்த பைனலில் 242.7 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 0.2 புள்ளி வித்தியாசத்தில் சீன வீரர் ஷுவாய்ஹாங் (242.5) வெள்ளி வென்றார். ஜெர்மனியின் ராபின் (220.0) வெண்கலம் பெற்றார்.பைனலில் சிப்ட்பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்று நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய சிப்ட் கவுர் சர்மா, 593 புள்ளி எடுத்து, ஐந்தாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். இந்தியாவின் மற்ற வீராங்கனைகள் ஆஷி (590) 19வது, அன்ஜும் மவுத்கில் (589) 27வது, நிஷால் (588) 35வது இடம் பிடித்தனர். ஆண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் தகுதிச்சுற்றில், இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங், 592 புள்ளி எடுத்து 6 வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார். இந்தியாவின் நிராஜ் குமார் (590) 14வது, ஸ்வப்னில் (586), 40 வது இடம் பிடித்தனர்.