உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: ரமித் தோல்வி

ஸ்குவாஷ்: ரமித் தோல்வி

எல் கவுனா: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் ரமித் டான்டன் தோல்வியடைந்தார்.எகிப்தில் எல் கவுனா சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்--40' இந்தியாவின் ரமித் டான்டன், இதில் உலகின் 'நம்பர்--3' பெருவின் டியாகோ எலியாசை எதிர்கொண்டார். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ரமித் டான்டன் 0-3 (2-11, 4-11, 2-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.அடுத்த மாதம் எகிப்தில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் ரமித் டான்டன், முதலிரண்டு சுற்றுகளில் எகிப்தின் அலி ஹுசைன், பிரான்ஸ் வீரர் விக்டர் குரூயினை தோற்கடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை