உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நீச்சல்: நடராஜ் வெள்ளி

நீச்சல்: நடராஜ் வெள்ளி

கேனட்-என்-ரூசிலன்: பிரான்சில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் (50 மீ., 'பேக்ஸ்டிரோக்') வெள்ளி வென்றார்.பிரான்சில், 30வது மாரே நாஸ்ட்ரம் சர்வதேச நீச்சல் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவில் இலக்கை 25.50 வினாடியில் கடந்த இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இவர், தனது சிறந்த செயல்பாட்டை (25.11 வினாடி) முறியடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஹங்கேரியின் ஆடம் ஜாஸ்சோ (25.46 வினாடி), பிரிட்டனின் ஸ்காட் கிப்சன் (25.64 வினாடி) முறையே தங்கம், வெண்கலம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி