உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சிங்கப்பூரில் உலக செஸ் * டில்லி, சென்னைக்கு நோ

சிங்கப்பூரில் உலக செஸ் * டில்லி, சென்னைக்கு நோ

புதுடில்லி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடக்க உள்ளது. சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவ. 20 முதல் டிச. 15 வரை நடக்க உள்ளது. நடப்பு சாம்பியன் டிங் லிரென் 31, (சீனா), கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த இந்தியாவின் இளம் வீரர் குகேஷ் 17, மோத உள்ளனர். 25 நாள் நடக்கவுள்ள இப்போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு சார்பில் நேரடியாக 'பிடே'யிடம் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.ஆனால் மத்திய அரசின் அனுமதியுடன் டில்லியில் நடத்த, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.எப்.,) விருப்பம் தெரிவித்து இருந்தது. சிங்கப்பூர் தன் பங்கிற்கு போட்டியில் குதித்தது. 'பிடே' தலைவர் வோர்கோவிச் கூறுகையில், ''பல்வேறு காரணிகள் குறித்து ஆராய்ந்த பின், உலக சாம்பியன்ஷிப் போட்டியை முதன் முறையாக சிங்கப்பூரில் நடத்த முடிவு செய்தோம். உலகின் முக்கிய சுற்றுலா தலம் மட்டுமல்லாமல் செஸ் போட்டி வேகமாக வளர்ந்து வரும் இடமாகவும் சிங்கப்பூர் உள்ளது. அடுத்து வரும் முக்கிய தொடர்கள் சென்னை, டில்லியில் நடத்தப்படும் என நம்புகிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை