உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மல்யுத்தம்: பைனலில் அன்ஷு * வினேஷ் போகத் ஏமாற்றம்

மல்யுத்தம்: பைனலில் அன்ஷு * வினேஷ் போகத் ஏமாற்றம்

புடாபெஸ்ட்: ஹங்கேரி மல்யுத்த தொடரில் இந்திய வீராங்கனைகள் அன்டிம், அன்ஷு பைனலுக்கு முன்னேறினர். ஹங்கேரியில் சர்வதேச மல்யுத்த தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடக்கின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வினேஷ் போகத், 50 கிலோ பிரிவு முதல் போட்டியில் வெற்றி பெற்றார். காலிறுதியில் சீனாவின் ஜியாங் ஜுவிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 53 கிலோ பிரிவில், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அன்டிம் பங்கல், காலிறுதியில் 10-0 என உஸ்பெகிஸ்தானின் எபோசினோவாவை வென்றார். அரையிறுதியில் போலந்தின் கேட்டர்ஸ்னாவை எதிர்கொண்டார். இதில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். 59 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அன்ஷு, 6-5 என மால்டோவாவின் அனஸ்தாசியா நிசிதாவை வென்றார். அரையிறுதியில் சீனாவின் குய் ஜங்கை 2-1 என வென்று பைனலுக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை