உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / டென்னிஸ்: ராமநாதன் வெற்றி

டென்னிஸ்: ராமநாதன் வெற்றி

ஷென்ஜென்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.சீனாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், செக் குடியரசின் டொமினிக் பாலனை சந்தித்தார். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ராம்குமார், அடுத்த செட்டை 6-2 என வசப்படுத்தினார். முடிவில் ராமநாதன் 6-4, 6-2 என வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், சீனாவின் லினாங் ஜியாவோவை எதிர்கொண்டார். முதல் செட்டை சசிக்குமார் 7-5 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 4-6 என கோட்டை விட்டார். தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டிலும் சொதப்பிய இவர், 4-6 என நழுவவிட்டார். இரண்டு மணி நேரம், 17 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சசிக்குமார் 7-5, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ