உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் குப்பையை சிதறும் லாரிகளால் சுகாதார பாதிப்பு

சாலையில் குப்பையை சிதறும் லாரிகளால் சுகாதார பாதிப்பு

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், கொளத்துார் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு எதிரில், சாலை முழுதும் குப்பை நிறைந்து காணப்படுகிறது. குப்பை கிடங்கிற்கு வரும் லாரிகள், குப்பையை சாலையிலேயே கொட்டிச் செல்கின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.ஆனந்தன், சிங்கபெருமாள் கோவில்.அருள் நகர் செல்லும் சாலையில்குப்பை குவித்து அட்டூழியம்ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் பிரதான சாலை வழியாக, அருள் நகர் செல்லும் வழியில், ஐந்து கண் ரயில்வே பாலம் உள்ளது.அதன் அருகில், தண்டவாளத்தை ஒட்டியவாறு, அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் குப்பையால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.குப்பையை அகற்ற வேண்டி, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும், இதுவரை குப்பையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, தேங்கியுள்ள குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சுப்பிரமணியன், அபிராம் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை