உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேசிய பல்கலை ரோல் பால் தமிழக வீரர்கள் 12 பேர் தகுதி

தேசிய பல்கலை ரோல் பால் தமிழக வீரர்கள் 12 பேர் தகுதி

சென்னை:தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள பல்கலை வளாகத்தில் வரும் 15ம் தேதி துவங்குகிறது.இதில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, ஏராளமான பல்கலை அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான தமிழக வீரர்களுக்கான தேர்வு போட்டி, தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் சமீபத்தில் நடந்தது.தேர்வில், பல்கலைக்கு உட்பட 18 கல்லுாரிகளில் இருந்து, 50 வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதில், செங்கல்பட்டு மாவட்ட ரோல்பால் சங்க தலைவர் அஸ்வின் மகாலிங்கம், திருவள்ளூர் மாவட்ட ரோல்பால் சங்க செயலர் சஞ்சிவி உள்ளிட்டோர், தமிழக அணிக்காக 12 வீரர் களை தேர்வு செய்தனர்.இது குறித்து அஸ்வின் மகாலிங்கம் கூறுகையில், ''ரோல்பால் விளையாட்டை, சென்னை மட்டுமின்றி அகில இந்திய அளவில் பிரபலப்படுத்தி வருகிறோம். இதன் ஓர் அங்கமாக, அகில இந்திய போட்டி நடத்தப்படுகிறது,'' என்றார். இந்த நிகழ்வில், பல்கலை துணைவேந்தர் சுந்தர், பதிவாளர் லில்லிபுஷ்பம் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பு செயலர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ