உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கால்வாயில் துார்வாரும் பணி 148 டன் கழிவு அகற்றம்

கால்வாயில் துார்வாரும் பணி 148 டன் கழிவு அகற்றம்

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், துாய்மை பணி, பூங்காக்களை சீரமைத்தல், சாலை அமைத்தல், குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, பம்மல், பல்லாவரம், செம்பாக்கம், பெருங்களத்துார் மற்றும் கிழக்கு தாம்பரம் மண்டலங்களில் உள்ள 70 வார்டுகளில், மழைநீர் கால்வாய்களை துார்வாரும் பணி நடந்து வருகிறது.தாம்பரம் மாநகராட்சியில், 785 கி.மீ., நீளத்திலான மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இவற்றை துார்வாரும் பணியில், 250 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மேலும், எட்டு பொக்லைன் இயந்திரங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள், 10 டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதுவரை, 148 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை