உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்

செய்யூர்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி, கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.பறக்கும் படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள மதுராந்தகம் பி.டி.ஓ., பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, சித்தாமூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், காரில் இருந்து 3 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில், காரில் வந்தவர் திருச்சியை சேர்ந்த சரண்யா என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி, பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், செய்யூர் உதவி தேர்தல் அலுவலர் ராதாவிடம் ஒப்படைத்தனர்.பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர், நேற்று அதிகாலை 3:20 மணிக்கு வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். இதில், பயணித்த ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவரிடம், இங்கிலாந்து நாட்டின் கரன்சியான 1,000 பிரிட்டிஷ் பவுண்ட் நோட்டுகள், உரிய ஆவணமின்றி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, இந்திய ரூபாயில் 1.06 லட்சம் மதிப்புடைய, 1,000 பிரிட்டிஷ் பவுண்ட் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை