உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கார் மீது சரக்கு லாரி மோதி விபத்து

கார் மீது சரக்கு லாரி மோதி விபத்து

செங்கல்பட்டு:கோயம்புத்துாரில் இருந்து சென்னை நோக்கி, நேற்று காலை திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கட்டுமான பொருட்களுடன் சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. சோழவந்தானைச் சேர்ந்த பாண்டி, 40, என்பவர் லாரியை ஓட்டினார்.செங்கல்பட்டு அடுத்த பழவேலி அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற 'கியா' கார் மீது மோதி, பின் சாலையின் இடது புறம் இருந்த மரத்தின் மீது மோதி சேதமடைந்தது.இதில், காரின் பின்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. நல்வாய்ப்பாக காரில் இருந்த அனைவரும் காயமின்றி தப்பினர். சரக்கு வாகன டிரைவர் பாண்டி சிறு காயமடைந்தார்.இதன் காரணமாக, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பழவேலி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், விபத்தில் சிக்கிய சரக்கு லாரியை கிரேன் இயந்திரம் வாயிலாக மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை