உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

மறைமலை நகர்: செங்கல்பட்டில் இருந்து சிலிண்டர் லோடு ஏற்றிக்கொண்டு, 'பொலிரோ ' சரக்கு வாகனம், நேற்று மாலை திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் நோக்கி சென்றது.சிங்கபெருமாள் கோவில் அடுத்த கீழக்கரணை அருகில் சென்ற போது, சரக்கு வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது.இதில், வாகனத்தில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் உருண்டு ஓடின. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், வாகனத்தில் சிக்கி காயமடைந்த டிரைவரை மீட்டு, பொத்தேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குஅனுப்பினர்.பின், கிரேன் இயந்திரம் வாயிலாக, சாலையில் கவிழ்ந்த வாகனத்தை மீட்டு, போக்குவரத்தை சரி செய்தனர். தாம்பரம்போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை