மேலும் செய்திகள்
மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது
23-Aug-2024
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே முள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 55. அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை, இயந்திரம் வாயிலாக அறுவடை செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மதுராந்தகம் மின் நிலையத்திலிருந்து விவசாய நிலத்தின் வழியாக, தாழ்வாக சென்ற மின் கம்பி மீது, அறுவடை இயந்திரம் உரசியதில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக, ஓட்டுனர் வாகனத்தில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.மதுராந்தகம் போலீசார் மற்றும் மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Aug-2024