மேலும் செய்திகள்
அடிதடி வழக்கில் இருவருக்கு காப்பு
6 hour(s) ago
கல் குவாரி லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து
16-Oct-2025
பசுமை தீபாவளி விழிப்புணர்வு போட்டி
16-Oct-2025
அச்சிறுபாக்கம்:சென்னை அடுத்த அக்கரையைச் சேர்ந்தவர் சந்தோஷ், 50. இவர், நேற்று சேலத்தில் இருந்து, தனது 'வால்வோ எஸ் 80' என்ற காரில், சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். உடன், அவரின் மனைவி மற்றும் மகன், மகள் பயணித்தனர்.அச்சிறுபாக்கம் அடுத்த அறப்பேடு பகுதியில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தனியார் உணவகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து அனைவரும் இறங்கி, தனியார் உணவகத்திற்கு சென்றனர்.பின், காரில் இருந்து புகை வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் மளமளவென தீப்பற்றி எரியத துவங்கியது. இதுகுறித்து, உணவகத்தின் உரிமையாளர், அச்சிறுபாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீணை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்ததால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. அச்சிறுபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
6 hour(s) ago
16-Oct-2025
16-Oct-2025