| ADDED : ஜூன் 07, 2024 01:48 AM
அச்சிறுபாக்கம்:சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேன்பாக்கம் ஊராட்சியில்,விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஊராட்சி வாயிலாக, முருங்கை நாற்று தயார் செய்து, கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டது.கடந்த ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ், பசுமை வலை மற்றும் கம்பி வேலியுடன் கூடிய முருங்கை நாற்றங்கால் பண்ணை கூடாரம், 3.42 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.தற்போது வரை, முருங்கை நாற்று உற்பத்தி துவங்கப்படாததால், பண்ணையில் அமைக்கப்பட்ட நாற்றங்கால்பசுமை வலை கூடாரம், பராமரிப்பின்றி கிழிந்து வீணாகியுள்ளது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுசெய்து, முருங்கை நர்சரியை சீரமைத்து,நாற்று உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.