| ADDED : ஆக 18, 2024 12:52 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், சூறை ஊராட்சிக்குட்பட்ட புழுதிவாக்கம் இந்திரா நகர் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.வேடந்தாங்கலில் இருந்து புழுதிவாக்கம் கூட்டுச் சாலை வழியாக, புக்கத்துறை வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து பிரிந்து, இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் சாலையில் அமைக்கப்பட்ட சிறுபாலம் உடைந்து, சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிலப்பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர், சாலையில் வழிந்து ஓடுகிறது.இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, புதிதாக சிறுபாலம் அமைத்து தரக் கோரி, இந்திரா நகர் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.