| ADDED : ஜூலை 06, 2024 10:22 PM
சேலையூர்:சேலையூரை அடுத்த மப்பேடு, புதுார் நகரைச் சேர்ந்தவர் டேனியல், 34; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று அதிகாலை பணிக்கு செல்வதற்காக, வெங்கம்பாக்கம் பிரதான சாலை வழியாக சென்றார். அப்போது, ஒரு சிறிய அட்டை பெட்டியில், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக கிடந்தன. அதை எடுத்து பார்த்தபோது, 98,000 ரூபாய் இருந்தது. அதை உரியவரிடம் ஒப்படைக்க முயற்சி செய்தும், தவறவிட்டவரின் முகவரி இல்லாததால், தன் சகோதரர் சாமுவேல் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு, வேலைக்கு சென்று விட்டார். சாமுவேல், அந்த பணத்தை சேலையூர் போலீசில் ஒப்படைத்தார். வாலிபரின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.