உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விரைவு ரயிலில் ஏசி பழுது பயணியர் வாக்குவாதம்

விரைவு ரயிலில் ஏசி பழுது பயணியர் வாக்குவாதம்

செங்கல்பட்டு:சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ராமேஸ்வரம் விரைவு ரயில், எழும்பூரில் மாலை புறப்பட்டது.ரயில் புறப்படும் போதே 'பி1' பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை. ஜன்னல்களையும் திறக்க முடியாததால், புழுக்கத்தில் பயணியர் கடும் அவதி அடைந்தனர்.செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இரவு 8:17 மணிக்கு வந்தபோது, பெட்டியில் 'ஏசி' வேலை செய்யாதது குறித்து, ரயில்வே ஊழியர்களிடம், பயணியர் கேள்வி எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, 'ஏசி' பழுதை நீக்கினர். இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக ராமேஸ்வரம் விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் காரணமாக, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை