உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜி.எஸ்.டி., சாலை மீடியனில் டேங்கர் லாரி மோதி விபத்து

ஜி.எஸ்.டி., சாலை மீடியனில் டேங்கர் லாரி மோதி விபத்து

செங்கல்பட்டு : சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி, இன்டென் நிறுவனத்தின் டேங்கர் லாரி, எரிவாயு நிரப்பிக் கொண்டு ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று மாலை சென்றது.டேங்கர் லாரியை, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபி, 29, என்பவர் ஓட்டினார். செங்கல்பட்டு பழவேலி அருகில் வேகமாக சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, சாலையின் மையத்தடுப்பில் ஏறி விபத்துக்குள்ளாகியது.டிரைவர் கோபி சிறு காயங்களுடன் தப்பினார். இச்சம்பவம் காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், கிரேன் இயந்திரம் வாயிலாக டேங்கர் லாரியை மீட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். விபத்து குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை