உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயிர்களில் நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்பு கள ஆய்வு செய்ய வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு

பயிர்களில் நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்பு கள ஆய்வு செய்ய வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண்மை திட்டங்களின் செயல்பாடு, விவசாயிகள் அடைந்த பயன்கள் குறித்து, கலெக்டர் அருண்ராஜ், சப் - கலெக்டர் நாராயணசர்மா, வேளாண் துறை இயக்குனர் அசோக் உள்ளிட்டோருடன், நேற்று கள ஆய்வு செய்தார்.திருக்கழுக்குன்றத்தில், வேளாண் துறை திட்டத்தில், சூரியகுமரன் என்பவர் அமைத்துள்ள எண்ணெய் பிழியும் இயந்திரம், ஈச்சங்கரணையில் மீனாகுமாரி என்பவர் அமைத்துள்ள நிலக்கடலை மதிப்பு கூட்டு நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.பட்டிக்காட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள கோடை குறுகிய கால நிலக்கடலை சாகுபடி, பாரம்பரிய நெல் சாகுபடி மற்றும் பிற திட்ட செயல்பாடுகளையும், அப்போது அவர் ஆய்வு செய்தார்.மரச்செக்கு வாயிலாக எடுக்கப்படும் எள், நிலக்கடலை, தேங்காய் உள்ளிட்ட எண்ணெய்களின் விற்பனை விபரம் குறித்து கேட்டறிந்தார்.நிலக்கடலை மதிப்பு கூட்டல் நிலையத்தில், நவீன இயந்திரம் வாயிலாக கடலையை பிரிப்பது, கிடங்கில் பாதுகாப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை பார்வையிட்டார்.எண்ணெய் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் வாயிலாக வர்த்தகத்தை மேம்படுத்த, பிரத்யேக 'பிராண்டிங்' பெயர் பயன்பாடு, தயாரிப்புகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உரிமத்துடன் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட ஆலோசனைகளை கூறினார்.கோடை குறுகிய கால பயிர் சாகுபடியாக நிலக்கடலை பயிரிட்டுள்ளதை கண்டு, கடலைக்கொடியில் இலைப்புள்ளி நோய் தாக்கம், அதனால் ஏற்படும் மகசூல் பாதிப்பு ஆகியவை குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.விவசாய சாகுபடி பகுதிகளில், அவ்வப்போது கள ஆய்வுசெய்து, பயிரில் நோய் தாக்கத்தை தவிர்க்கவும், மகசூலை பெருக்கவும், விவசாயிகளுக்கு வழிகாட்டி, ஆலோசனை வழங்க வேண்டும் என, வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அப்போது, இயற்கை உரங்களை, தனியாரை விட அதிக விலைக்கு, அரசு சார்பில் விற்கப்படுவதாக, விவசாயி ஒருவர் குற்றம்சாட்டினார். தனியார் விலைக்கேற்ப குறைக்கப்ப்டும் என, கலெக்டர் அவரிடம் உறுதியளித்தார்.பாரம்பரிய நெல்லிற்கு, இயற்கை உர விவசாயத்திற்கான 'ஆர்கானிக்' சான்று பெற்றால், சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம் என்று, விவசாயிடம் கலெக்டர் ஆலோசனை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை