மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
மாமல்லபுரம்:மேல்நிலை வகுப்பு மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்க, பள்ளிக் கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.வட்டாரம், மாவட்டம், மாநிலம் என, கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாநில அளவில், கலையரசன், கலையரசி பட்டங்களுக்கு தேர்வு செய்யப்படும் மாணவ - மாணவியருக்கு, விருதும் வழங்கப்படுகிறது.அரசு உதவிபெறும் பள்ளிகள் மாணவ - மாணவியருக்கும், தனியாக போட்டிகள் நடத்தி, பரிசு, சான்றிதழ் அளிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, தனித்தனியாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருப்பொருளில், ஆக., 22ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை, போட்டிகள் நடக்கின்றன.இதற்காக, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், கலையார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட குழு ஏற்படுத்தி, ஒவ்வொரு மாணவ - மாணவியரும், குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது பங்கேற்க ஊக்கப்படுத்துமாறு, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுறுத்திஉள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago