உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதையில் வாலிபருக்கு கடி ஆட்டோ ஓட்டுனர் கைது

போதையில் வாலிபருக்கு கடி ஆட்டோ ஓட்டுனர் கைது

புழல், செங்குன்றம் அடுத்த சோழவரம் மாறம்பேடு, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 32. இவர், நேற்றுமுன்தினம் இரவு, புழல் காவாங்கரை அருகே உள்ள 'பெட்ரோல் பங்க்'கில், தன் நண்பரை சந்திக்கநின்றிருந்தார்.அப்போது, ஆட்டோவில் பெட்ரோல் நிரப்ப வந்த புழல் பகுதியைச் சேர்ந்த பழனி, முருகன் மீது மோதுவது போல்வந்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.அதில், மது போதையில்இருந்த பழனி, முருகனை சரமாரியாக தாக்கி, அவரது கையில் பல இடங்களில் கடித்துள்ளார்.ரோந்து போலீசார் முருகனை மீட்டு,அருகிலுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.பின் பழனியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்