உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீர் சேகரிப்பு குறித்து செங்கையில் விழிப்புணர்வு

மழைநீர் சேகரிப்பு குறித்து செங்கையில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு:தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்குவதையொட்டி, தமிழக அரசு சார்பில், மாநிலம் முழுதும் மழைநீர் சேகரிப்பு திட்டம் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை, செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இங்கு துவங்கிய பேரணி, பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக பங்கேற்றனர். ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்ற பேரணி, பழைய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. இதில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் வாயிலாக, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம், காணொலி காட்சி வாயிலாக திரையிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை