உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் பைக் திருடன் கைது

செங்கையில் பைக் திருடன் கைது

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில், நேற்று முன்தினம் இரவு, செங்கல்பட்டு நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த நபரை, காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட நபர் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த விஜயகாந்த், 43, என்பதும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில், இருசக்கர வாகனங்கள் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் தெரிந்தது.இதையடுத்து, போலீசார் விஜயகாந்தை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை