| ADDED : ஆக 02, 2024 02:16 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இத்தடம் மூன்று கட்டங்களாக, நான்குவழிப் பாதையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.முதல் கட்டமாக, மாமல்லபுரம் - முகையூர் இடையே மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கப்பாக்கம், விட்டிலாபுரம், வாயலுார், கடலுார் உள்ளிட்ட இடங்களில், இத்தடத்தில் பிற கிராம சாலைகள் குறுக்கிடுகின்றன. அவ்வாறு கடக்கும் சாலையில் போக்குவரத்து அதிகம் என்பதால், புதுச்சேரி சாலையில் துாண்கள் அமைத்து, அவற்றின் மீது கார்டர்கள் பொருத்தி, மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.பூஞ்சேரியில் அம்பாள் நகர் சாலை, கடம்பாடி, பெருமாள்சேரி உள்ளிட்ட இடங்களில், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய கிராம சாலைகள் குறுக்கிடுகின்றன.அவற்றில் வாகன போக்குவரத்தும் குறைவாகவே உள்ளன.அதனால், இப்பகுதிகளில் சிறிய வாகனங்கள் மட்டுமே கடக்கும் வகையில், துாண்கள் இல்லாமல், சிறிய அளவிலான கான்கிரீட் பெட்டி பாலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.