மேலும் செய்திகள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 232 பேர் ஆப்சென்ட்
8 hour(s) ago
மேல்மருவத்துாரில் பைக் திருடிய நபருக்கு காப்பு
8 hour(s) ago
அரசு பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க பெற்றோர் கோரிக்கை
9 hour(s) ago
மதுராந்தகம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, 23 நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் 22 என, 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்குகின்றன.இதில், பணியாற்றும் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு, உணவு அருந்தவும் மற்றும் ஓய்வெடுக்கவும் அறை இல்லாததால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்நிலையில், மதுராந்தகம் -- செங்கல்பட்டு வரை செல்லும் தடம் எண்: டி1 பேருந்தை, நேற்று மதியம், மதுராந்தகத்தில் நிறுத்திவிட்டு, உணவு அருந்துவதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளனர்.இதில், பயணச்சீட்டு மற்றும் பயணக் கட்டண பையை, நடத்துனர் கையில் எடுத்துச் சென்றுள்ளார். மீதமுள்ள பேருந்து பயணச் சீட்டுகளை, ஓட்டுனர் இருக்கையின் அருகில் வைத்து விட்டு சென்றுள்ளார்.இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், 12,000 ரூபாய் மதிப்புள்ள பயணச்சீட்டுகளை திருடி சென்றனர்.இதேபோல், மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடப்பதால், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago