உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுவர் விளையாட்டு திடல் பராமரிப்பின்றி சீரழிவு

சிறுவர் விளையாட்டு திடல் பராமரிப்பின்றி சீரழிவு

மதுராந்தகம்,:கருங்குழி பேரூராட்சியில், 9வது வார்டு, ஏரி நகர் பகுதி சிறுவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட விளையாட்டு திடல் சீரழிந்து வருகிறது.கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 9வது வார்டுக்கு உட்பட்ட ஏரி நகர் தெருவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.இங்கு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதி மற்றும் மின்சார இணைப்பு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டு, பேரூராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.தற்போது, அப்பூங்கா பராமரிப்பின்றி, இருக்கைகள் உடைந்தும், பூங்காவின் உள்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்தும், குழந்தைகள் விளையாட முடியாதவாறு உள்ளது.மேலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்களும் உடைந்து சீரழிந்த நிலையில் உள்ளன.எனவே, பராமரிப்பு இன்றி உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ