உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்லுாரிகளுக்கான கால்பந்து எஸ்.ஆர்.எம்., சாம்பியன்

கல்லுாரிகளுக்கான கால்பந்து எஸ்.ஆர்.எம்., சாம்பியன்

சென்னை, : எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், அக்கல்லுாரி நிறுவனரின் பிறந்த நாளை முன்னிட்டு, கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி, கடந்த மூன்று நாட்கள், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் உள்ள அதன் பல்கலை வளாகத்தில் நடத்தப்பட்டது.இதில், நியூ கல்லுாரி, லயோலா, குருநானக் உட்பட 16 அணிகள் 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் மோதின. லீக் சுற்றில், எஸ்.ஆர்.எம்., பொறியியல் அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில் நியூ கல்லுாரியையும், நியூ கல்லுாரி அணி, 1 - 0 என்ற கணக்கில் வேல்ஸ் அணியையும் தோற்கடித்தன.லயோலா அணி, 3 - 0 என்ற கணக்கில் நியூ கல்லுாரியையும், எஸ்.ஆர்.எம்., அணி, 4 - 0 என்ற கணக்கில் வேல்ஸ் அணியையும் வீழ்த்தின. அனைத்து போட்டிகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி முதலிடத்தை பிடித்தது. லயோலா கல்லுாரி இரண்டாம் இடத்தையும், நியூ கல்லுாரி மற்றும் வேல்ஸ் பல்கலை அணிகள் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ