| ADDED : ஆக 23, 2024 02:25 AM
திருப்போரூர்:கண்ணகப்பட்டு, மடம் தெருவில் உள்ள வேலாயுத தீர்த்த குளத்திற்கு 59 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன.திருப்போரூர் பேரூராட்சி, கண்ணகப்பட்டு மடம் தெருவில், சிதம்பர சுவாமிகளால் நிறுவப்பட்டதாக கூறப்படும் வேலாயுத தீர்த்த குளம் உள்ளது. பக்தர்களால், புண்ணிய தீர்த்தமாக கருதப்படும், பழமை வாய்ந்த இந்த குளம் சீரழிந்து வந்தது. எனவே, இக்குளத்தை சீரமைத்து மேம்படுத்தி, சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, கந்தசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், முதற்கட்டமாக 59 லட்சம் ரூபாய் மதிப்பில் படித்துறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, தற்போது முடிந்துள்ளது. அடுத்து சுற்றுச்சுவருக்கு வண்ணம் அடித்தல் பணிகள் நடைபெற உள்ளது.