உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புலிப்பாக்கத்தில் முதுமக்கள் தாழிகள் சீரழியும் வரலாற்றுச்சுவடுகள்

புலிப்பாக்கத்தில் முதுமக்கள் தாழிகள் சீரழியும் வரலாற்றுச்சுவடுகள்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் வனப்பகுதி அருகில் உள்ள மலைப்பகுதியில், பல ஆண்டுகள் பழமையான, 20க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் புதைத்த வைத்த ஆதாரங்கள் உள்ளன.பழங்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை, 6 அடி முதல் 15 அடி வரை பள்ளம் தோண்டி, தாழியில் வைத்து புதைத்து, அதன் மீது பெரும்பாறைகளை வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.இதற்கான ஆதாரங்கள் பாலாற்றங்கரை, சாஸ்திரம்பாக்கம், வெண்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ளன.புலிப்பாக்கம் மலை மீது முதுமக்கள் தாழிகள் உள்ள இடங்களில், சமீபகாலமாக மது அருந்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த மலை, திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளதால், இரவு நேரத்தில் இங்கு வரும் சமூக விரோதிகள், மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி விட்டு செல்கின்றனர்.இதன் காரணமாக, பாதுகாக்கப்பட வேண்டிய நம் வரலாற்று பதிவுகள், பராமரிப்பின்றி வீணாவதாக, வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, இந்த பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அத்துமீறி யாரும் உள்ளே வரக்கூடாது என, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை