உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவிடந்தை திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

திருவிடந்தை திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, தெற்குப்பட்டு ஆகிய பகுதிகளின் கிராம பொதுக் கோவிலாக திரவுபதி அம்மன் கோவில் விளங்குகிறது.இக்கோவிலில், ஆண்டுதோறும் நடத்தும் தீமிதி வசந்த உற்சவம், ஜூலை 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டது.அன்று துவங்கி, தினசரி, திருவள்ளூர் மாவட்ட ஆர்.கே.பேட்டை லோகநாதன் குழுவினர், மகாபாரத சொற்பொழிவு ஆற்றினர்.வாலாஜாபாத் செங்காடு நாகராஜ் குழுவினர், பாடல்கள் பாடினர். ஜூலை 9ம் தேதி முதல் நேற்று வரை, தினமும் இரவு மகாபாரத தெருக்கூத்து நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. அம்மன் வீதியுலா சென்றார்.விழாவின் முக்கிய உற்சவமாக, நேற்று பகலில் துரியோதனனை வதம் செய்து, திரவுபதி கூந்தல் முடிக்கும் மகாபாரத நிகழ்வுகளுடன், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.உற்சவத்திற்காக விரதமிருந்த பக்தர்கள், இரவு தீ மிதித்தனர். இன்று, தருமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை