| ADDED : ஜூலை 06, 2024 12:41 AM
மறைமலை நகர்:திருவண்ணாமலையில் இருந்து தாம்பரம் நோக்கி, நேற்று காலை அரசு பேருந்து, 35 பயணியருடன் வந்து கொண்டிருந்தது.திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில் அருகில் வந்துகொண்டிருந்த போது, ஒரகடம் செல்லும் சாலை சந்திப்பில், தாம்பரத்தில் இருந்து வந்த லாரி மீது மோதியது.இதில், அரசு பேருந்தின்முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்இருவரும் காயம் அடைந்தனர்.நல்வாய்ப்பாக, பயணியர் காயமின்றி தப்பினர்.தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கிரேன் இயந்திரம் வாயிலாக, விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர்.இச்சம்பவம் காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம் மார்க்கத்தில், சிங்கபெருமாள் கோவில் -- மகேந்திரா சிட்டி வரை, இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில், தொடர்ந்துஈடுபட்டனர்.இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.