உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை கலைஞர்களுக்கு அரசு பூம்புகார் விருது

மாமல்லை கலைஞர்களுக்கு அரசு பூம்புகார் விருது

மாமல்லபுரம்:தமிழகத்தில் சிறந்து விளங்கும் கைவினை கலைஞர்களுக்கு, தமிழக அரசின் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பூம்புகார் மாநில விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.கடந்த 2022 - 23 ஆண்டிற்குரிய விருதுகளை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று முன்தினம் வழங்கினார். மாமல்லபுரத்தில் கற்சிற்பக்கூடம் நடத்தும் சிற்பக் கலைஞர் வரதன், கல்லில் வடித்த தமிழ்த்தாய் சிற்பத்திற்காக விருது பெற்றார். மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பத்தைச் சேர்ந்த மரச்சிற்ப பட்டதாரி ராஜரத்தினம், மரத்தில் வடித்த காலசம்ஹாரமூர்த்தி சிற்பத்திற்காக விருது பெற்றார். இரண்டு பேருக்கும், தலா 50,000 ரூபாய், நான்கு கிராம் தங்கப் பதக்கம் மற்றும் தாமிர பத்திரம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை