உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கந்தசுவாமி கோவில் கடை ஏலம் வரும் 12ம் தேதி தள்ளிவைப்பு

கந்தசுவாமி கோவில் கடை ஏலம் வரும் 12ம் தேதி தள்ளிவைப்பு

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கடைகள், பார்க்கிங் கட்டண வசூல் உள்ளிட்ட பலவகை உரிமங்களுக்கான பொது ஏலம், வரும் 12ம் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்போரூர் கந்தசாமி கோவில் பிரசாதங்கள் விற்பனை, காணிக்கை முடிகள் சேகரிப்பு, நெய் தீபம் விற்பனை, புல எண் 271/4ல் நிறுத்தப்படும் வாகனங்கள் பாதுகாப்பு கட்டண வசூல், தற்காலிக கடைகளுக்கு வாடகை வசூல் உள்ளிட்டவற்றுக்கு பொது ஏலம் நடத்தப்படும்.அதேபோல், கோவில் வளாகத்தில் வெள்ளி உரு விற்பனை, சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு, காணிக்கையாக அளிக்கும் ஆடு, கோழி சேகரிப்பு உள்ளிட்டவற்றுக்கும், பொது ஏலம் நடத்த, கடந்த மே 31ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் எதிர்பார்த்த அளவில் வராததால், வரும் 12ம் தேதி ஏலம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை