உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை சப்த கன்னியருக்கு பால்குட ஊர்வலம் விமரிசை

மாமல்லை சப்த கன்னியருக்கு பால்குட ஊர்வலம் விமரிசை

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள சப்த கன்னியம்மன் கோவிலில், 22ம் ஆண்டு ஆடி உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. அன்று மாலை பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.நேற்று, கருக்காத்தம்மன் கோவிலிலிருந்து, 108 பால் குடங்களுடன் வந்த பக்தர்கள், சப்த கன்னியர் கோவிலை அடைந்து, சுவாமியருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று காலை கடலிலிருந்து கங்கை நீர் சேகரித்து, அம்மன் கரகத்துடன் வீதிகளில் உலா செல்கின்றனர். நண்பகலில் கோவிலை அடைந்து, சுவாமியரை வழிபட்டு கூழ் வார்க்கின்றனர். இரவு, கும்பம் படைத்து வழிபாடு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை