மேலும் செய்திகள்
பட்டம் வினாடி - வினா போட்டி
1 hour(s) ago
பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு
1 hour(s) ago
இந்திய நாட்டிய விழா வரும் 21ல் துவக்கம்
1 hour(s) ago
இன்று இனிதாக ... (13.12.2025) செங்கல்பட்டு
1 hour(s) ago
செங்கல்பட்டு:மதுராந்தகம் ஏரி பணியை, மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம், கலெக்டரிடம் மனு அளித்தார்.இதுகுறித்து, மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம், கலெக்டரிடம் நேற்று முன்தினம் அளித்த மனு விபரம்:மதுராந்தகம் ஏரி துார்வாரும் பணிக்காக 'டெண்டர்' விடப்பட்டடு, பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்த ஏரியின் நீர்ப்பாசனம் 36 கிராமங்களில், விவசாயம் சாகுபடி செய்யப்பயன்பட்டு வருகிறது.துார்வாரும் பணி மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பருவமழை காலங்களில், தண்ணீர் வெளியேற்றுவதால், அதை ஒட்டியுள்ள ஏரிகள் நிரம்புவதில்லை.மேலும், ஆடு, மாடுகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன. ஏரியை துார்வாரும் பணியை மழைக்காலத்திற்குள் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அருண்ராஜ், 'ஏரி பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago