உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதலியார்குப்பம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க எதிர்பார்ப்பு

முதலியார்குப்பம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க எதிர்பார்ப்பு

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இதில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.மேலும், அதே வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு, 10 குழந்தைகள் உள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தின் மூன்று பக்கத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.அங்கன்வாடி மைய கட்டடம் உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல், திறந்த நிலையில் உள்ளதால், அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்து நாய், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பள்ளி வளாகத்தில் உலா வருகின்றன. அதனால், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை