உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரவு நேர பேருந்து இயக்க முருங்கை மக்கள் கோரிக்கை

இரவு நேர பேருந்து இயக்க முருங்கை மக்கள் கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே வெளியம்பாக்கம், கரசங்கால், முருங்கை, நெடுங்கல், கொங்கரை மாம்பட்டு ஊராட்சிகளில், 7,000த்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.தினசரி நுாற்றுக்கணக்கானோர் மற்றும் மாணவ - மாணவியர் அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் இருந்து, தடம் எண்: 12ஏ பேருந்து மட்டும், நாள்தோறும் மூன்று முறை வந்து செல்கிறது.மாலை நேரம், 6:30 மணிக்கு வரும் பேருந்துக்கு பின், இரவு நேரத்தில் அரசு பேருந்து வசதி இல்லாததால், முருங்கை, நெடுங்கல், கொங்கரை மாம்பட்டு பகுதியில் வசிப்போர், ஷேர் ஆட்டோவை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.பள்ளி செல்லும் மாணவர்கள், பேருந்து வசதி இல்லாததால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு சென்று வருகின்றனர்.மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற நகரங்களில் வேலைக்கு சென்று வருவோர், இரவு நேரத்தில், கிராமப்பகுதிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால், மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இரவு நேர பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை