உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆட்டோ - லோடு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

ஆட்டோ - லோடு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

திருப்போரூர்:சென்னை அரசன்கழனியை சேர்ந்தவர் மேக்சிமஸ் குமார், 42. ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், தாழம்பூர் - -காரணை பிரதான சாலையில், ஆட்டோவைஓட்டிச் சென்றுள்ளார்.அவருடன், டென்சில் குமார், 40, என்பவர், ஆட்டோவின் பின் இருக்கையில் அமர்ந்துவந்துள்ளார்.அப்போது, எதிரே வந்த மினி லோடு வாகனத்தில், எதிர்பாராத விதமாக ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.இதில், ஆட்டோ ஓட்டிச்சென்ற மேக்சிமஸ் குமார், சம்பவ இடத்திலேயே பலியானார்.ஆட்டோவில் அமர்ந்து வந்தடென்சில் குமார், காலில் லேசானகாயத்துடன் உயிர் தப்பினார்.தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான மேக்சிமஸ் குமார் உடலைமீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக, போலீசார் வழக்குபதிவு செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை